SKIP TO MAIN CONTENT

2.9 மில்லியன் கார்களைத் திருத்த வேலைக்காக திரும்பப் பெறுகிறது டொயோட்டா!

Toyota
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, உலகம் முழுவதுமுள்ள 2.9 மில்லியன் கார்களை திருத்த வேலைக்காக மீளப்பெறுவதாக அறிவித்துள்ளது.

டொயோட்டா நிறுவனத்திற்கான இயந்திரப் பாகங்களை வழங்கும் ஜப்பானின் Takata தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட airbag inflator பொருத்தப்பட்ட கார்களே, இவ்வாறு திரும்பப் பெறப்படுகின்றன.

குறித்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட airbag inflatorஇல் பழுது இருப்பது கண்டறியப்பட்டதையடுத்தே, இவை மீளப்பெறப்படுவதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Auris, RAV4, Corolla Axio, Corolla Fielder, Noah / Voxy உள்ளிட்ட பலரக கார்கள் இதில் அடங்குகின்றன.

இதன்படி ஜப்பானில் 750,000, சீனாவில் 650,000, ஐரோப்பாவில் 350,000 மற்றும் மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் 1.16 மில்லியன் கார்கள் மீளப்பெறப்படுகின்றன. வட அமெரிக்காவிலுள்ள கார்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now