20 ஆயிரம் வாகனங்களில் Air Bag பிரச்சினை! திருத்துனர்களிடம் கொண்டுசெல்லுமாறு அறிவிப்பு!

A major recall of Takata airbags is now underway following major safety issues.

Source: Choice

ஆஸ்திரேலியாவில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 20 ஆயிரம் வாகனங்களில் air bag பிரச்சினை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் குறிப்பிட்ட சில ரக வாகனங்களை உடனடியாக அந்த வாகன திருத்துனர்களிடம் கொண்டுசெல்லுமாறு Australian Competition and Consumer Commission அறிவித்துள்ளது.

BMW, Holden, Honda, Mitsubishi, Toyota உட்பட பல வகையான வாகனங்களில் இந்த பிரச்சினை இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை திருத்துனர்களிடம் கொண்டுசெல்லாமல் வீதியில் ஓட்டிச்செல்வது பாரதூரமான ஆபத்து நிறைந்தது என்று Australian Competition and Consumer Commission தெரிவித்துள்ளது

இவ்வாறு பிரச்சினையுள்ள Takata air bag பொருத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் வாகன வகைகள் வருமாறு -

- 2010 Holden Cruze

- Honda City MY2012, CR-V MY 2011, Insight MY2012-2013, Jazz MY2012-2014 & Jazz Hybrid MY2012-2013, Honda Civic MY2006-2011, Jazz Hybrid MY2012 and Legend MY2007-2012, Honda Accord MY2001-2007 and Honda MDX MY2003-2006.

- 2003 – 2005 Toyota Echo and Rav4

- BMW 5 Series (E39) MY2002-2003, BMW 3 Series (E46) MY2001-2006 & BMW X5 (E53) MY2003

- Mitsubishi 2014 ML & MN Triton.


1 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now