SKIP TO MAIN CONTENT

20 மணி நேரம்: 4,484 அழைப்புகள்: 191,000 டொலர் தொலைபேசிக் கட்டணம்

Your mobile can be hacked even when its battery is flat!
Source: SBS

2 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

ஒருவர் வேலை விடயமாக வெளிநாடு சென்றுவிட்டு நாடு திரும்பும்போது ஒரு லட்சத்தி 91 ஆயிரம் டொலர்கள் தொலைபேசிக்கட்டணத்தைச் செலுத்துமாறு கடிதம் வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.

கடந்த 2014ம் ஆண்டு Kim Beveridge என்ற மென்பொருள் நிறுவன அதிகாரிக்கு உண்மையிலேயே அப்படியான ஒரு கடிதம் வந்திருக்கிறது.

முதலில் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை அவரால் நம்பமுடியவில்லை. பின்னர் தனக்கான சேவையை வழங்கும் TeleChoice என்ற தொலைபேசி நிறுவனத்துடன் தொடர்புகொண்டபோது, அக்கடிதத்தில் இருந்ததை உறுதி செய்த TeleChoice பணியாளர்கள் அதிலுள்ள தொகையை கட்ட வேண்டுமெனப் பணித்தார்கள்.

Kim Beveridge வெளிநாட்டில் roaming-இல் இருந்தபோது, 20 மணித்தியாலத்தில் 4,484 அழைப்புக்களை மேற்கொண்டதற்கான கட்டணம் தான் அது. இது எப்படி சாத்தியம் என்று யோசிக்கிறீர்களா? நடந்தது இதுதான்.

Kim Beveridge வேலை நிமித்தம் வெளியூர் சென்றபோது முறைப்படி roaming வசதியைப் பெற்றுக்கொண்டு சென்றிருக்கிறார்.

ஆனால் அன்றையதினம் அவரது தொலைபேசி திருடுபோயிருக்கிறது. சுமார் 20 மணித்தியாலங்கள் கழித்து தனது தொலைபேசி திருடுபோய்விட்டதை TeleChoice நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு Kim Beveridge அறிவித்திருக்கிறார். ஆனால் அதற்கிடையில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டிவிட்டனர்.

Kim Beveridge-இன் சிம் கார்டை வேறொரு தொலைபேசியில் போட்டு, அதனை லத்வியா நாட்டிலுள்ள ஒரு இலக்கத்திற்கு forward செய்து ஒரே நேரத்தில் பல அழைப்புக்களை ஏற்கும் வகையில் செய்திருக்கிறார்கள். Kim Beveridge-வின் தொலைபேசி இணைப்பில் அசாதாரண நிலையை அவதானித்த TeleChoice நிறுவனம் அவரது சேவையைத் துண்டிக்கும் வரை, 191,000 டொலர்களுக்கான அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.

இதையடுத்து தன்னால் அத்தொகையைச் செலுத்த முடியாது என வாதிட்ட Kim Beveridge, நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார். TeleChoice நிறுவனமும் பதிலுக்கு வாதிட, இவ்வழக்கு, இறுதியாக Victorian Supreme Court-இல் முடிவடைந்திருக்கிறது.

குறித்த வழக்கின் முடிவில் Kim Beveridge மீது தவறில்லை என்ற County Court of Victoria-வின் முடிவை Victorian Supreme Court- உம் உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now