வாக்காளர்கள்
இந்த வருட தேர்தலில் 15,676,659 ஆஸ்திரேலியர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தார்கள். கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், ஒரு மில்லியன் அதிக வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்குகொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். வாக்களிக்கும் உரிமையுள்ளவர்களில் 95% சதவீதமானவர்கள் தேர்தலில் பங்கு கொள்ள பதிவு செய்தனர். சுமார் இரண்டரை இலட்சம் இளைஞர்கள் (18 வயதிலிருந்து 24 வரையானவர்கள்) தேர்தலில் வாக்களிக்கும் உரிமைபெற்றிருந்தாலும் பதிவு செய்யாமல் விட்டதால், பங்குபற்றும் உரிமையற்றிருந்தார்கள்.
கட்சிகள்.
57 கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன (2013 தேர்தலில் 54 கட்சிகள்). இதில் 33 கட்சிகள் தமக்கான சின்னத்தைக் கொண்டிருந்தன.
வேட்பாளர்கள்
1,625 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். கடந்த தேர்தலை விட 92 வேட்பாளர்கள் குறைவான தேர்தல் இது.
994 வேட்பாளர்கள் House of Representatives எனப்படும் கீழ் சபையிலும் 631 வேட்பாளர்கள் செனட் சபையிலும் போட்டியிட்டார்கள். அதில் 540 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணிக்கையில் மட்டுமல்ல, விகிதாசாரத்திலும் கடந்த தேர்தலை விட அதிக பெண்கள் போட்டியிட்டார்கள்.
வாக்குச் சாவடிகள்
ஏழாயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களித்தார்கள். அதில் சுமார் 600 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நாளுக்கு முன்னரே வாக்களிக்க முடிந்தது. தொலைதூரத்திலிருப்பவர்கள் வாக்களிப்பதற்காக 41 நடமாடும் வாக்குச் சாவடிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. எப்படி வாக்களிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் அறிய முடியாதவர்களுக்கு உதவிபுரிய, 27 வேறு மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
வாக்குப்பதிவு அதிகாரிகள்
எழுபத்தையாயிரத்திற்கும் அதிகமானவர்கள் வாக்குப்பதிவு அதிகாரிகளாகப் பணிக்கமர்த்தப்பட்டிருந்தார்கள். 45 மில்லியன் வாக்குத் தாள்கள் விநியோகிக்கப்பட்டன. அறுபதாயிரம் வாக்குப் பெட்டிகள், ஒருலட்சத்து இருபதாயிரம் வாக்களிக்கும் தனி இடங்கள், ஒரு இலட்சம் எழுதுகோல்கள், 140 கிலோமீட்டர் நீளமான கயிறு என்பனவும் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டன.
தேர்தல் தொகுதிகள்
NSW மாநிலத்திலுள்ள Grayndler தொகுதிதான் மிகச்சிறிய தேர்தல் தொகுதி வெறுfம 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான தொகுதி மகச்சிறியதாக இருக்கையில், 1,629 858 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான தொகுதி ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய தேர்தல் தொகுதியாகும் மற்றைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் தொகை மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
