SKIP TO MAIN CONTENT

2017-இல் மரணமடைந்த ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரம்!

Heart health
Source: Getty Images

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

இதய நோய் மற்றும் மறதிநோய் ஆகியவற்றினால் ஏற்படும் மரணங்கள்தான் ஆஸ்திரேலியர்கள் மத்தியில் தொடர்ந்தும் உயிர்கொல்லிகளாக தொடர்வதாக ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் பொதுநல சேவைகள் அமைப்பு (Australian Institute of Heath and Welfare) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு தரவுகளை சுட்டிக்காட்டி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் - அந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் மொத்தம் ஒரு லட்சத்து அறுபதாயிரத்து 909 பேர் இறந்துள்ளார்கள் என்றும் அவர்களில் 82, 858 ஆண்கள், 78, 051 பெண்கள் என்றும் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 100 000 பேரிலும் 529 பேர் இறந்திருக்கிறார்கள் என்ற சராசரி புள்ளிவிவரத்தையும் அந்த அமைப்பு கணித்திருக்கிறது.

இதயநோய்தான் ஆஸ்திரேலியாவின் பாரிய உயிர்கொல்லி என்று சுட்டிக்காட்டியிருக்கும் மேற்படி சுகாதார அமைப்பு, 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வெண்ணிக்கை சற்று குறைந்துள்ளபோதும், இதய நோயினால் 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 18 ஆயிரத்து 590 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளது.

அதேநேரம் மறதிநோயினால் 2017-ஆம் ஆண்டு 13 ஆயிரத்து 729 பேர் மரணமடைந்துள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now