SKIP TO MAIN CONTENT

2017-க்கான உலகின் மிகச்சிறந்த விமான சேவைகள்!

business class
Classy business class. Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

2017ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விமான சேவைகள் எவை என்ற புதிய பட்டியலை விமானதரப்படுத்தல் நிறுவனமான Skytrax வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 2016 முதல் மே 2017 வரையான காலப்பகுதியில், 105 நாடுகளைச் சேர்ந்த 19.87 மில்லியன் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்தப் பட்டியலை Skytrax வெளியிட்டுள்ளதுடன் விமானநிறுவனங்களுக்கான விருதுகளையும் வழங்கியுள்ளது.

இதன்படி டோஹாவைத் தளமாகக் கொண்ட Qatar Airways விமானசேவை நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

Skytrax-இன் சிறந்த விமான சேவைகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. Qatar Airways

2. Singapore Airlines

3. ANA All Nippon Airways

4. Emirates

5. Cathay Pacific

6. EVA Air

7. Lufthansa

8. Etihad Airways

9. Hainan Airlines

10. Garuda Indonesia

அதேநேரம் உலகின் சிறந்த அதேநேரம் மலிவான 10 விமானசேவை நிறுவனங்களின் பட்டியலையும் Skytrax வெளியிட்டுள்ளது.

1. AirAsia 

2. Norwegian

3. jetBlue Airways

4. easyJet

5. Virgin America

6. Jetstar Airways

7. AirAsiaX

8. Azul Linhas Aéreas Brasileiras

9. Southwest Airlines

10. Indigo

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now