நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதிவிபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போதும் 2018 இல் ஓரளவு குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் வாகன ஓட்டுனர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் ஆபத்தானவையாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு விக்டோரியாவில் ஏற்பட்ட வீதி விபத்து மரணங்களின் எண்ணிக்கை 259. ஆனால், 2018 இல் இந்த எண்ணிக்கை நாற்பத்தைந்தால் குறைந்திருக்கிறது. இதுபோல தெற்கு ஆஸ்திரேலியாவின் வீதி விபத்து மரணங்கள் 2017 இல் நூறாக இருந்தபோதும் கடந்த ஆண்டு எண்பதாக குறைந்துள்ளது. தஸ்மேனிய வீதி விபத்து மரணங்கள் 34 இலிருந்து 33 ஆக குறைந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதிவிபத்து மரணங்களின் எண்ணிக்கையில் பிறிஸ்பன் முதலிடத்திலிருப்பினும் (246) கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒரு மரணத்தினால் அந்த எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்னி விவரங்கள் கிடைக்கப்பெறாதபோதும் அங்கு இடம்பெற்ற வீதி விபத்து மரணங்கள் 50 என்று உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
