SKIP TO MAIN CONTENT

2020 ஜனவரியில் ஸ்கொட் மொறிஸன் இந்தியா பயணம்!

Australia's Prime Minister Scott Morrison and India's Prime Minister Narendra Modi (file pic)
Australia's Prime Minister Scott Morrison and India's Prime Minister Narendra Modi (file pic) Source: (AAP Image/Mick Tsikas)

1 min read

Published

Source: SBS Punjabi


Skip to article content

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸன் அடுத்தவருடம் ஜனவரி மாதம் இந்தியா பயணமாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு தனது இந்தப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்கொட் மொறிஸன் கடந்த வாரம் சிட்னியில் கூறினார்.

பிரதமராக பதவியேற்ற பின்னர் ஸ்கொட் மொறிஸன் இந்தியாவுக்கு மேற்கொள்கின்ற முதலாவது பயணம் இதுவாகும்.

ஆஸ்திரேலிய வர்த்த பிரதிநிதிகள் குழுவோடு இந்தியா செல்லவுள்ள ஸ்கொட் மொறிஸன் அந்நாட்டுடனான வர்த்தக உறவுகள் குறித்தும் இருதரப்பு வாணிப உத்திகள் குறித்தும் முக்கிய பேச்சு நடத்துவார் என்று தெரிவிக்கப்பபடுகிறது.

ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பெரிய வர்த்தக உறுப்பு நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now