SKIP TO MAIN CONTENT

2022 பெடரல் தேர்தல் : முதியோர் பராமரிப்பு - முக்கிய கட்சிகள் முன் வைக்கும் கொள்கைகள்

பெடரல் தேர்தல் மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் கொள்கைகளை முன் நிறுத்தி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் முதியோர் பராமரிப்பு குறித்து முக்கிய கட்சிகள் முன் வைக்கும் கொள்கைகளை சுருக்கமாக பார்ப்போம்

Female care assistant spends some time with an Elderly man in his home
A friendly, young, female carer visits an elderly male in his home. Source: Getty Images

2 min read

Published

Updated

By Selvi


Skip to article content

லிபரல்

  • முதியோர் பராமரிப்பு இல்லங்களில் 24/7 தாதியர் சேவை மற்றும் முதியோருக்கு 215 நிமிடங்கள் நேரடி தினசரி பராமரிப்பு
  • மேலும் 40,000 Home Care Packages வீடுகளில் வசித்து வரும் முதியவர்களுக்கு ஆதரவு உதவி சேவைகள் வழங்குதல்
  • முதியோர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள முதியவர்களின் மருந்து மேலாண்மை சேவைகளுக்கு $345.7 மில்லியன் வழங்குதல்
  • பராமரிப்பு மற்றும் ஆதரவுத் துறையில் இளங்கலை தாதியியல் மாணவர்களுக்கான 5,250 மருத்துவ வேலைவாய்ப்புகளை ஆதரிக்க $14.9 மில்லியன் முதலீடு செய்தல்
  • Dementia மறதிநோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள் மற்றும் பிராந்திய, கிராமப்புற மற்றும் தொலைதூர சமூகங்களில் உள்ளவர்களின் தேவைகளை சிறப்பாக ஆதரிக்கும் வகையில் புதிய நிதி திட்டத்திற்கு மாற $20.1 மில்லியன் முதலீடு

லேபர்

  • ஒவ்வொரு முதியோர் பராமரிப்பு இல்லங்களில் 24/7 தாதியர் சேவை
  • ராயல் கமிஷன் பரிந்துரைக்கு ஏற்ப முதியோர் இல்லங்களில் கூடுதலான தாதியர்கள் நியமனம். நாள்தோறும் 215 நிமிடங்கள் ஒவ்வொருவருக்கும் நேரடி பராமரிப்பை உறுதி செய்தல்
  • முதியோர் பராமரிப்பு துறை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
  • முதியோர் பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களுக்கு தரமான ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குதல்
  • முதியோர் பராமரிப்பு துறைக்கு செலவிடப்படும் பணத்திற்கான கணக்கு விபரங்களை வெளிப்படையாக பொது மக்கள் அறியும் வகையில் விரிவான அறிக்கை வெளியிடுதல் மேலும் இதனை நடைமுறைப்படுத்தி நெறிப்படுத்த முதியோர் பராமரிப்பு பாதுகாப்பு ஆணையருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல்

 

கிரீன்ஸ்

  • முதியோர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள முதியோருக்கு 4 மணிநேரம் 18 நிமிடங்களாக தினசரி  பராமரிப்பு நேரத்தை அதிகரிக்க வருடாந்தம் $6 பில்லியன் நிதி வழங்குதல்
  • முதியோர் பராமரிப்பு மற்றும் உடல் மற்றும் இரசாயன கட்டுப்பாடுகளுக்கு மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறைக்கு உத்தரவாதம்
  • Home Care Packages வீடுகளில் வசித்து வரும் முதியவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு உதவி சேவைகளுக்கான காத்திருப்பு பட்டியலை இல்லாமல் ஆக்கும் வகையில் $260 மில்லியன் முதலீடு

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now