லிபரல்
- ஓய்வு ஊதியத்தில் 40 சதவிகிதம் வரை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் அதிகமான ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய முதல் வீட்டை வாங்குவதற்கு உதவுவது
- குறைந்த வைப்பு நீதியுடன் முதலாவது வீடு வாங்க அரசு வழங்கும் உத்தரவாதம் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 35,000மாக உயர்த்துதல்
- ஒற்றை பெற்றோர் குறைந்த வைப்பு நீதியுடன் முதலாவது வீடு வாங்க உதவும் திட்டம்
- 2029ஆம் ஆண்டு வரை பள்ளிக்கூடங்களுக்கு $318.9 பில்லியன் பெடரல் நிதி ஒதுக்குவதாக உறுதி
- La Trobe Nexus திட்டத்தின் மூலம் ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தொழில்நுட்ப வசதிகளை அதிகரிக்க $40 மில்லியன் வழங்குதல்
- Child Care குழந்தைப் பராமரிப்பிற்கு பெற்றோர் செலுத்தும் தொகையினை குறைக்கும் திட்டம்
- 2022-23ல் குழந்தை பராமரிப்பில் சுமார் $11 பில்லியன் முதலீடு
- குழந்தை பராமரிப்பு மானியத்தின் மூலம் குழந்தை பராமரிப்பு கட்டணத்தில் 85 சதவீதம் வரை செலவை ஈடுகட்டும் திட்டத்தை தொடர்வது
லேபர்
- Child Care குழந்தைப் பராமரிப்பை மலிவாக மாற்றுவதற்கு சுமார் $5.4 பில்லியன் முதலீடு செய்தல்
- குழந்தை பராமரிப்பு துறையின் கட்டண ஒழுங்குமுறை பொறிமுறையினை ACCC கொண்டு வடிவமைத்து குடும்பங்களுக்கான அதிகபட்ச குழந்தை பராமரிப்பு மானியத்தை 90 சதவீதமாக உயர்த்துதல்
- 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 20,000 கூடுதல் பல்கலைக்கழக இடங்களை வழங்க $481.7 மில்லியன் முதலீடு செய்தல் மற்றும் இலவச TAFE கல்வி வழங்குதல்
- புதிய எரிசக்தித் தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய திறன்களை வளர்ப்பதற்கான திட்டத்திற்கு $10 மில்லியன் முதலீடு செய்தல்
- குறைந்த வைப்பு நிதியுடன் குறைந்த தொகையை கடனாக பெற்று அதிகமானோர் வீடுகள் வாங்க உதவும் Help to Buy திட்டத்திற்கு $329 மில்லியன் நிதி ஒதுக்கீடு
- Help to Buy திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 10,000 பேர் 2 சதவீத வைப்பு நிதியுடன் புதிய வீட்டிற்கு 40 சதவீதம் பழைய வீட்டிற்கு 30 சதவீதம் என்ற ரீதியில் வீட்டு விலையில் ஒரு பங்கினை லேபர் அரசு பொறுப்பேற்று வீடு வாங்குவதை சாத்தியப்படுத்துதல்
- ஆண்டுதோறும் பிராந்திய பகுதிகளில் வசிக்கும் 10,000 பேருக்கு முதலாவது வீடு வாங்க உதவுதல்
கிரீன்ஸ்
- அடுத்த நான்கு ஆண்டுகளில் $19 பில்லியனை முதலீடு செய்து குழந்தைப் பராமரிப்பு மற்றும் அவர்களுக்கான ஆரம்பக் கல்வி, அனைவருக்கும் இலவசமாகவும் அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்தல்
- சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம், பாதுகாப்பான வேலைகள் இருப்பதை உறுதி செய்தல்
- TAFE மற்றும் பல்கலைக்கழக கல்வியை இலவசமாக வழங்குதல் மேலும் மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்தல் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான நிதியினை அதிகரித்தல்
- 2035க்குள் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை அடைவது
- புதைபடிவ எரிபொருள் தொழிலுக்கான அனைத்து மானியங்களையும் நீக்குதல்
- Public housing அரசு குறைந்த வாடகை அல்லது இலவசமாக வழங்கி வரும் வீடுகளில் வசிப்பதற்கு காத்திருப்பவர்களின் பட்டியலை நீக்கும் வகையில் ஒரு மில்லியன் புதிய வீடுகளை கட்டுதல்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share
