SKIP TO MAIN CONTENT

2022 பெடரல் தேர்தல் : சுகாதாரம் - பிரதான கட்சிகள் முன் வைக்கும் கொள்கைகள்

பெடரல் தேர்தல் மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் கொள்கைகளை முன் நிறுத்தி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் சுகாதாரம் குறித்து பிரதான கட்சிகள் முன் வைக்கும் கொள்கைகளை சுருக்கமாக பார்ப்போம்

I'm here for you
Source: Getty Images

2 min read

Published

Updated

By Selvi


Skip to article content

லிபரல்

  • 2022-23 நிதியாண்டில் அரசு மருத்துவமனைகளுக்கான நிதி ஒதுக்கீடு $27.2 பில்லியனாக அதிகரித்தல் அதனை 2025-26 நிதியாண்டில் $32.7 பில்லியனாக உயர்த்துதல்
  • 2022 ஜூலை 1 முதல் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 71,000 பேருக்கு CGM என்கின்ற தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு திட்டத்தை விரிவுபடுத்த $273.1 மில்லியன் முதலீடு செய்தல்
  • மெடிகேர் நிதியை 2022-23 நிதியாண்டில் $31.4 பில்லியனாக உயர்த்துதல் அதனை 2025-26 நிதியாண்டில் $35.5 பில்லியனாக உயர்த்துதல்
  • மார்பக புற்றுநோய், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், தோலழற்சி, ஆஸ்துமா, முதுகெலும்பு தசைச் சிதைவு, HIV தொற்று மற்றும் இதய செயலிழப்புக்கான சிகிச்சைகள் உட்பட புதிய மற்றும் திருத்தப்பட்ட Pharmaceutical Benefits Scheme (PBS) மருந்து பட்டியல்களுக்கு மேலும் $2.4 பில்லியன் முதலீடு
  • ஜனவரி 1 2023 முதல் Pharmaceutical Benefits Scheme (PBS) இணை-கட்டணத்தை 10 டாலர்கள் வரை குறைக்க $558.1 மில்லியன் முதலீடு
  • தேசிய மகளிர் சுகாதார உத்தி 2020–2030 திட்டம் மூலம் பெண்களின் சுகாதார நலனுக்கென $333 மில்லியன் முதலீடு
  • பூர்வீகக்குடி மக்களின் சுகாதார நலன் மற்றும் பிராந்திய மக்களின் சுகாதார நலன்களுக்கென கூடுதல் நீதி ஒதுக்கீடு

லேபர்

  • மெடிகேர் திட்டத்தை பலப்படுத்த மேலும் ஒரு பில்லியன் நிதி 
  • அவசர சிகிச்சைப் பிரிவுகளின் அழுத்தத்தை குறைக்க, குறைந்தபட்சம் 50 மெடிகேர் அவசர சிகிச்சை கிளினிக்குகளை நிறுவுதல்
  • மருந்து சீட்டு ஒன்றுக்கு Pharmaceutical Benefits Scheme (PBS) இணை-கட்டணத்தை அதிகபட்சமாக $42.50 இலிருந்து அதிகபட்சமாக $30 ஆகக் குறைப்பதன் மூலம் மருந்துகளின் விலையை குறைத்தல்
  • Regional பிராந்திய பகுதிகளுக்கு கூடுதலான குடும்ப வைத்தியர்களை அமர்த்துதல்
  • புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பரிசோதனை திட்டத்தை விரிவுபடுத்துதல்
  • National Nurse and Midwife Health Service - தாதிகளுக்கு தேசிய இலவச ஆதரவு சேவை நிறுவுதல்

 

கிரீன்ஸ்

  • உளநல சிகிச்சையினை மெடிகேருக்குள் கொண்டுவரும் வகையில் $4.8 பில்லியன் முதலீடு
  • பூர்வீகக்குடி மக்களின் சுகாதார சேவைக்கு $371 மில்லியன் நிதி ஒதுக்கீடு
  • மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இலவச மாதவிடாய் நாப்கின் வழங்க $68.5 மில்லியன் முதலீடு
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சிக்கு $250 மில்லியன் முதலீடு

 


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now