லிபரல்
- அடுத்த நான்கு ஆண்டுகளில் நிரந்தர வரி நிவாரணமாக $100 பில்லியனை வழங்குவதன் மூலம் ஆஸ்திரேலியர்கள் தாங்கள் சம்பாதிப்பதில் அதிகமாக அவர்களே வைத்திருப்பதை உறுதி செய்தல்
- இந்த ஆண்டு ஜூலை 1 முதல் $1,500 வரை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்கு வழங்குவதன் மூலம் ஆஸ்திரேலியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு உதவுதல்
- எரிபொருள் வரியை தற்காலிகமாக பாதியாகக் குறைத்தல் இதனால் குடும்பங்கள் ஒவ்வொரு முறையும் லிட்டருக்கு 22.1 சதம் சேமிக்க உதவுதல்
- சிறு வணிகங்களுக்கு தங்கள் பணியாளர்களை மேம்படுத்தவும் பயிற்சி செய்யவும் மற்றும் டிஜிட்டல் மயமாக்க வரிச் சலுகைகள் வழங்குதல்
- தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்கள், சிறு வணிகங்கள், வீடு, கரியமில உமிழ்வு, மின்சாரம் போன்றவை மீது புதிய வரிகள் விதிப்பது இல்லை என்று உறுதியளித்தல்
- ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பை மேம்படுத்துதல்
- Commonwealth முதியோர் சுகாதார அட்டைகளுக்கான தகுதியை விரிவுபடுத்துதல்
லேபர்
- $45,000க்கு மேல் வருமானம் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும் சட்டப்பூர்வ வரிக் குறைப்புகளின் மூலம் 9 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களுக்கு வரி நிவாரணம்
- குறைந்த மற்றும் நடுத்தர வருமான வரிக்குறைப்பு வரம்பை $420 ஆல் அதிகரிப்பதன் மூலம் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு உதவுதல்
- சிறு வணிகங்களின் பண பரிவர்த்தன செலவுகளை குறைத்து உதவுதல்
- Centrelink-க்கு செலுத்தவேண்டிய கடனை வசூலிப்பதற்கென அரசு பயன்படுத்திய Robodebt என்ற கணினி மூலமான கடன் வசூலிப்பு குறித்து விசாரணை செய்ய இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு ராயல் கமிஷன் நிறுவுதல்
கிரீன்ஸ்
- ஆஸ்திரேலியாவின் சுமார் 122 பில்லியனர்களின் உலகளாவிய நிகர செல்வத்தின் மீது ஆண்டுதோறும் 6% வரி வசூலிப்பது
- எரிவாயு ஏற்றுமதியாளர்கள் ஈட்டும் லாபத்தின் மீது வரி வசூலிப்பது
- பாதுகாப்பற்ற வேலை நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்து உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பான வேலையை உறுதி செய்தல்
- தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்தல்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share
