SKIP TO MAIN CONTENT

2024 ஆம் ஆண்டு 3G சேவைக்கு மூடுவிழா! Telstra அறிவிப்பு!!

AAP
Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

5G சேவையை நாடுமுழுவதும் விஸ்தரிக்கும் காரணத்தையொட்டி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுடன் Telstra தனது பழைய 3G சேவையை முற்றுமுழுதாக நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 3G சேவையின் பின்னர்தான் முதன்முதலாக கைத்தொலைபேசிகளில் இணையத்தை பயன்படுத்தும் வசதி, பாடல்களை நேரடியாக கேட்கும் வசதி மற்றும் குறுந்தகவல் மூலம் படங்களை அனுப்பும் வசதி ஆகியவை பயனாளர்களுக்கு கிடைக்கப்பெற்றன.

ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக 5G சேவையை நாடுமுழுவதற்கும் அறிமுகம் செய்கின்ற நுழைவாயிலில் நின்றுகொண்டிருப்பதால், Telstra தனது பழைய 3G தொழில்நுட்பத்தை முற்றுமுழுதாக நிறுத்தவுள்ளது.

புதிய புதிய வளர்ச்சிப்படிகளை நோக்கி பயணிக்கின்றபோது பழைய தொழில்நுட்பமுறைகளை கைவிடவேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் 2011 ஆம் ஆண்டு 4G சேவை அறிமுகப்படுத்தப்பட்டபின்னர் 2016 இல் 2G சேவை முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டது என்றும் Telstra தெரிவித்துள்ளது.

தற்போது ஆஸ்திரேலியாவின் 10 நகரங்களில் மாத்திரம் சாத்தியமாகியுள்ள 5G சேவை அடுத்த ஒரு வருடத்தில் 25 நகரங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது என Telstra தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now