2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கால்பந்தாட்டப் போட்டி வடஅமெரிக்கா கண்டத்திலுள்ள மூன்று நாடுகளான மெக்ஸிகோ, அமெரிக்கா, கனடா என்று மூன்று நாடுகளிலும் நடைபெறும் என்று உலக கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் FIFA Congress அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த பந்தயத்தை தமது நாட்டில் நடத்தவேண்டும் என்று போட்டியில் குதித்த மொரோக்கோ நாடு இந்த தேர்வுப் போட்டியில் தோல்வி கண்டது.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கால்பந்தாட்டப் போட்டியில் மொத்தம் 80 போட்டிகள் நடக்கும் என்றும் அதில் 10 போட்டிகள் கனடா நாட்டிலும், 10 போட்டிகள் மெக்ஸிகோ நாட்டிலும், மீதியுள்ள 60 போட்டிகள் அமெரிக்காவிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாடுகள் இணைந்து உலக கால்பந்தாட்டப் போட்டியை நடத்தப்போவது இதுவே முதன்முறையாகும்.
நாளை ரஷ்யா நாட்டில் துவங்கும் உலக கால்பந்தாட்டப் போட்டி இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப்பின் 2022 ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெறும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கால்பந்தாட்டப் போட்டி மெக்ஸிகோ, அமெரிக்கா, கனடா எனும் மூன்று நாடுகளில் நடைபெறும்.
