கொரோனா பரவல் ஆரம்பமான பின்னர் சுமார் 20 லட்சம் ஆஸ்திரேலியர்கள் தங்களது கடனட்டையில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டியிருப்பதாக நிதி ஒப்பீட்டு ஆய்வு இணையத்தளமான finder தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடனட்டைகளை பயன்படுத்தும் ஒருகோடி 40 லட்சம் பயனாளர்களில் 15 வீதமானவர்கள் இவ்வாறு தங்கள் வரம்பைத் தாண்டியிருப்பதாக அந்த தரவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
தங்கள் அட்டைகளில் அளவுக்கதிகமாக செலவு செய்பவர்களில் 26 வீதமானவர்கள் 18 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் இவ்வாறு செலவு செய்பவர்களில் 18 வீதமானவர்கள் பெண்கள் என்றும், ஆண்கள் 13 வீதமானவர்கள் மாத்திரமே என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும் பலர் அநேகமாக சகல செலவுகளுக்கும் கடனட்டையை உபயோகிப்பது அதிகரித்துள்ளதாலும், அத்தியாவசியப்பொருட்களை இணையத்தில் கொள்முதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று தரவுகளை ஆய்வுசெய்த பொருளியல் நிபுணர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
