SKIP TO MAIN CONTENT

$3.8m லாட்டரி பரிசு தனக்கு விழுந்தது தெரியாமல் இருந்த நபர்

N.S.W மாநிலத்தில் Riverwood புறநகரில் வசிக்கும் ஒருவர் மூன்று வாரங்களாக தனக்கு அதிஷ்டலாபச்சீட்டுல் 3.8 மில்லியன் டாலர்கள் பரிசு விழுந்திருப்பது தெரியாமல் அதிஷ்டலாபச்சீட்டை தனது walllet பர்சிலேயே வைத்துள்ளார்.

Lotto
Source: Seven Network

1 min read

Published

Updated

By Selvi



Skip to article content

கடந்த வாரம்  வீட்டிற்கு சாமான் வாங்க சென்ற அவர் எதேச்சையாக Riverwoodல்தான் அதிஷ்டலாபச்சீட்டு வாங்கிய கடைக்கு சென்று தனது சீட்டை கொடுத்து பரிசோதித்துள்ளார்.  இந்த சீட்டுக்கு 3.8 மில்லியன் பரிசு விழுந்திருக்கிறது என்று கடைக்காரர் சொன்ன உடன் அவரால் நம்ப முடியவில்லை.  பொதுவாகவே தான் அதிஷ்ட லாபச்சீட்டு வாங்கும் போது அதனை NSW players club cardல் பதிவது வழமை என்றும் ஆனால் இந்த முறை தான் பதிய வில்லை என்றும் பெயர் வெளியிட விரும்பாத 3.8 மல்லியன் லாட்டரி பரிசு வென்ற நபர் கூறியுள்ளார்.

இந்த Super Jackpot லாட்டரி குலுக்கல் கடந்த July 2ஆம் திகதி நடைபெற்றது.  ஆஸ்திரேலியாவில் உரிமை கோரப்படாத மிகப்பெரிய லாட்டரி பரிசு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now