நாடெங்கிலுமுள்ள 30 BIG W கிளைகளையும் இரண்டு விநியோக மையங்களையும் அடுத்த மூன்று வருடங்களில் மூடவுள்ளதாக Woolworths நிறுவனம் அறிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்களிலுமுள்ள மிகுதி 153 BIG W அங்காடிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்காகவே தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக Woolworths நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேற்படி அங்காடிகள் மற்றும் விநியோக மையங்களை மூடுவதன் மூலம் 37 கோடி டொலர்கள் Woolworths நிறுவனம் இலாபமீட்டமுடியும் என்றும் தெரிவித்துள்ளது.
அங்காடிகளை மூடுவதன் மூலம் BIG W தர பொருட்களுக்கு கேள்வி குறைந்துவிட்டது என்று அர்த்தம் ஆகாது. ஏனைய அங்காடிகளின் வருவாயை அதிகரிப்பதற்காகவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ள Woolworths நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Brad Banducci மேற்படி அங்காடிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது ஏனைய கிளைகளில் பணிக்கு அமர்த்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.
Woolworths நிறுவனத்தின் வீட்டுப்பொருட்கள் விற்பனை நிறுவனமான Masters Home Improvement, 2011 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
