SKIP TO MAIN CONTENT

30 மில்லியன் டொலர்களை வென்ற அதிஷ்டசாலியை தேடுகிறது Powerball!

powerball win
Powerball Lottery Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் Powerball jackpot சீட்டிழுப்பில் 30 மில்லியன் டொலர்களை வென்ற அதிஷ்டசாலியை Powerball நிறுவனம் தேடுகிறது.

குறிப்பிட்ட வெற்றியாளர் டஸ்மேனியாவில் தனது அதிஷ்டலாப சீட்டினை கொள்வனவு செய்திருந்ததாகவும், தனது தொடர்பு விவரத்தை சரியாக பதிவு செய்யாத காரணத்தினால் அவரை  தங்களால் தொடர்புகொண்டு வெற்றிச்செய்தியை அறிவிக்கமுடியாதுள்ளதாகவும் Powerball நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற சீட்டிழுப்பில் ஒருவர் மாத்திரமே முழுத்தொகையையும் வெற்றிகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிபெற்ற இலக்கம் 20, 6, 30, 17, 8, 10, 2 Powerball 8 ஆகும்.

அதிஷ்டசாலி  தன்னை  உறுதிப்படுத்தி பணத்தை பெற்றுகொள்வதற்கு அழைக்கவேண்டிய இலக்கம் 131 868.

இதேவேளை கடந்த செப்டம்பர் 11ம் திகதி நடைபெற்ற Oz Lotto jackpot சீட்டிழுப்பில் 30 மில்லியன் டொலர்களை வென்ற நியூ சவுத் வேல்ஸ் நபர் இன்னமும் தனது பரிசுப்பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன் வெற்றி இலக்கம் 6, 4, 36, 23, 2, 30,32 supplementary 11 & 27

Pacific Square News - Maroubra என்ற இடத்தில் இந்த அதிஷ்டலாப சீட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now