முப்பத்து நான்கு வருடங்களுக்கு பிறகு கடும் பனிப்புகாரில் மூழ்கிய மெல்பேர்ன் நகரின் அதிகூடிய வெப்பநிலை நேற்று ஞாயிற்றுக்கிழமை 9.6 பாகை செல்சியஸாக காணப்பட்டது என காலநிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.
1985ம் ஆண்டுக்குப் பின்னர் ஜுன் மாதத்தில் பதிவான ஆகக்குறைந்த வெப்பநிலை இதுவென குறிப்பிடப்படுகிறது.
மெல்பேர்ன் நகரும் அதனை அண்டிய பிரதேசங்களும் ஞாயிற்றுக்கிழமை காலை முற்று முழுதாகவே மூடுபனியில் மூழ்கியிருந்ததாக அவதானித்துள்ள காலநிலை அவதானிப்பு மையம் குளிர்காலத்தின் அதிசயக்கத்தக்க நாள் இதுவென்று கூறியுள்ளது.
இதேவேளை, விக்டோரியாவின் எல்லை பிரதேசங்களான Wangaratta, Shepparton, Albury-Wodonga ஆகிய இடங்களின் வெப்பநிலை -3 செல்சியஸ் என்று பதிவாகியிருக்கிறது.
புகார்படிந்த காலநிலை அதிகாலை தாண்டி முற்பகலிலும் தொடர்ந்ததால் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் அனைவரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share
