SKIP TO MAIN CONTENT

41 இலங்கையர்களுடன் மூழ்கிக்கொண்டிருந்த படகு ஆஸி - இலங்கை படையினரால் மீட்பு!

boat
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருந்தபோது சுமார் 41 அகதிகளுடன் மூழ்கவிருந்த படகினை ஆஸ்திரேலிய - இலங்கை கடற்படையினர் இணைந்து மீட்டெடுத்த சம்பவமொன்று கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton-உடன் சென்றுள்ள ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படைத்தளபதிகளில் ஒருவரான Major General Craig Furini இந்த தகவலை அங்கு கூறியுள்ளார். தமது படையினருடன் இணைந்து குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக The Australian ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் - குறிப்பிட்ட சம்பவம் மே மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் படகினுள் தண்ணீர் புகுந்துகொண்டதால் அது மூழ்கத்தொடங்கியபோது அதிஷ்டவசமாக மீட்புப்படையினரால் அதிலிருந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஆஸ்திரேலியா நோக்கிய படகுப்பயணங்கள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள குறித்த ஊடகம், மார்ச் 7 ஆம் திகதி இதேபோன்றதொரு பயணத்தின்போது 40 பயணிகளுடன் ஒரு படகு இடைமறிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த தொடர்ச்சியான சம்பவங்களையடுத்து எல்லைப்பாதுகாப்பினை ஆஸ்திரேலிய கரையோர காவல்படையினர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now