நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றில், லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட யேசுநாதரின் ஓவியம் ஒன்று, சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
Salvator Mundi (Savior of the World) என அழைக்கப்படும் இந்த ஓவியம், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதுடன் தற்போது உலகில் எஞ்சியிருக்கும் லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட 20 ஓவியங்களில் ஒன்று என குறிப்பிடப்படுகின்றது.
Christie என்ற ஏல விற்பனை நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஏலத்தில், குறித்த ஓவியம் ஆகக்குறைந்தது 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 450 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இந்த ஓவியத்தை வாங்கியவர் யார் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
