SKIP TO MAIN CONTENT

46 ஆவது நாடாளுமன்றம் இன்று கூடியது! அகதிகள் சட்டம் மீது அடுத்த வாரம் விவாதம்!

AAP
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் 46 ஆவது நாடாளுமன்றம் இன்று கன்பராவில் கூடியுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள முக்கியவிடயமாக வரிக்குறைப்பு விவாதத்திற்கு அடுத்தபடியாக மனுஸ் - நவுறு அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரும் சட்டத்தை தோற்கடிக்கும் விவாதம் காணப்படுகின்றது.

ஆனால், அரசாங்கத்தில் இந்த முயற்சியை லேபர் மற்றும் ஏனைய எதிர்கட்சி உறுப்பினர்கள் அனுமதிக்கக்கூடாது என்று அகதிகள் நல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இன்று கூடியுள்ள நாடாளுமன்றத்தில் 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 42 புதிய செனட் உறுப்பினர்களும் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டனர்.

கடந்த மே 18 ஆம் திகதி நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றியீட்டிய புதிய உறுப்பினர்களுடன் இடம்பெறும் இந்நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் Bob Hawke-க்கிற்கான நினைவு வணக்கம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மனுஸ் - நவுறு அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருகின்ற Medevac சட்டத்தினை தோற்கடிப்பது தமது அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்று என அரசாங்கம் அறிவித்துள்ளபோதும், அந்த சட்டமூலம் மீதான விவாதம் அடுத்த வாரமே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now