SKIP TO MAIN CONTENT

5,700 ஊழியர்களிடம் 300 மில்லியன் டொலர்களைச் சுரண்டிய Woolworths நிறுவனம்!

Woolworths
Woolworths Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

Woolworths நிறுவனத்தில் 5,700 ஊழியர்களுக்கு கடந்த 10 வருடங்களாக குறைந்த ஊதியம் வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாக Fair Work Ombudsman தெரிவித்துள்ளது.

சுமார் 300 மில்லியன் டொலர்கள் வரையிலான ஊதியத்தை ஊழியர்களுக்கு குறைத்து வழங்கியுள்ளதாக Woolworths ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பில் பணியிட கண்காணிப்புக் குழு -workplace watchdog முழுமையான விசாரணை  நடத்தவுள்ளது. 

இதனடிப்படையில்  ஒவ்வொரு ஊழியருக்கும் சராசரியாக 50, 000 டொலர்கள் மற்றும் வட்டி ஆகியவற்றை Woolworths  திருப்பிக்கொடுக்கவேண்டிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Woolworths கிளைகளில் இவ்வாறு 5,700 உழியர்களின் ஊதியம் குறைத்து வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து தமக்குச் சொந்தமான  Big W மற்றும் Dan Murphys liquor போன்ற நிறுவனங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக Woolworths நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தமது தரவுகளினடிப்படையில் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நடைமுறை கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பெரிய நிறுவனங்கள் இப்படியான தவறுகளைச் செய்வது துரதிஷ்டவசமானது என Fair Work Ombudsman  தெரிவித்துள்ளது. 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now