SKIP TO MAIN CONTENT

5 ஆண்டுகளில் 33 புகலிடக்கோரிக்கையாளர் படகுகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன!

Police inspect a sunken vessel that carried asylum seekers.
Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Tony Abbott-இன் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட Operation Sovereign Borders  நடவடிக்கையின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 33 படகுகள் கடலில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டதாக அல்லது திருப்பியனுப்பப்பட்டதாக The Australian  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் தடுத்து நிறுத்தப்பட்ட அல்லது திருப்பியனுப்பப்பட்ட இந்த 33 படகுகளிலும் கிட்டத்தட்ட 800 புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நேசநாடுகளின் கூட்டு நடவடிக்கை மூலம் 78 ஆட்கடத்தல் நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சுமார் 2,525 பேர் ஆஸ்திரேலியாவுக்கு படகுப்பயணம் மேற்கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now