SKIP TO MAIN CONTENT

5G: வரமா? சாபமா?

5G Technology
Source: iStockphoto

6 min read

Published

Updated

By R.Sathiyanathan


Skip to article content

5G wireless technology அல்லது cellular technology உலக முழுவதும் மெதுவாக ஆனால் திடமாக காலடி எடுத்துவைத்துவரும் இந்த நேரத்தில் இந்த 5G காரணமாகப் பரவும் radiofrequency waves என்ற ரேடியோ கதிரலைகள், மனிதர்க்குப் பாதுகாப்பானதுதானா என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால், ‘5G தொழில்நுட்பம் காரணமாக ஏற்படக்கூடிய நன்மைகள் ஏராளம். 5G ரேடியோ கதிரலைகள் நமது உடல்நலத்தை பாதிக்குமோ என்று பதட்டப்படத்தேவையில்லை, அது முற்றிலும் பாதுகாப்பானது’ என்று நிபுணர்களும் பல அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

A 5G mobile phone mast is seen in Cardiff, United Kingdom.
A 5G mobile phone mast is seen in Cardiff, United Kingdom. Source: Getty Images Europe

5G பாதுகாப்பானதா, இல்லையா? 5G வரமா, இல்லை சாபமா ?

5G என்பது 5th generation- அதாவது 5ஆவது தலைமுறை wireless technology (cellular technology) மொபைல் தொழில்நுட்பம். மொபைல் என்பது மொபைல் போன்களை மட்டும் குறிக்காது; மாறாக, வயர் தொடர்பு இல்லாமல் நடைபெறும் பல செயல்களையும் இது குறிக்கும். இந்த தொழில்நுட்பம் காரணமாக, இணையம் மற்றும் தொலைத்தொடர்பைப் பொறுத்த அளவில் faster browsing, streaming, download speed, better connectivity என்பன சாத்தியமாகும். மட்டுமல்ல, latency என்ற இருகருவிகள் ஒன்றோடொன்று தொடர்பை ஏற்படுத்தும்போது ஏற்படக்கூடிய தாமதத்தை வெகுவாகக் குறைக்கும்.

இதைத்தவிர பிரதானமாக, integrated applications என்ற ரோபோக்களின் செயல்பாடு, self driving cars என்ற தானியங்கி மோட்டார் வாகனங்கள், medical devices என்ற வைத்திய சிகிச்சை மற்றும் நோயைக்கண்டறியும் கருவிகள் அல்லது உபகரணங்கள் என்பவற்றின் ஆற்றலையும் இது விரிவுபடுத்தும்.

நேருக்கு நேர் மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட சேவைகள், சிகிச்சைகள் என்பவற்றைத் தொலைதூரத்திலிருந்து தனி ஒருவரோ அல்லது நிறுவனமோ தற்போது வழங்கக் கூடியதாக இருக்கும் சூழல் இன்னும் விரிவுபடுத்தப்படும். ஆகவே 5G நமது நாளாந்த வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிடும்.

commons.wikimedia
Source: commons.wikimedia

அலைக்கற்றை வரிசை தொழில்நுட்பத்தில் நாம் நீண்ட தூரம் வந்துவிட்டோம்.

1G என்ற முதலாவது தலைமுறை மொபைல் தொழில்நுட்பம் வந்து இற்றைக்கு 40 வருடங்கள் ஆகிவிட்டன. 1G வந்ததன் காரணமாகத்தான் மொபைல் போன் உட்பட பல cellular அல்லது wireless தொடர்புகள் மற்றும் செயல்பாடுகள் சாத்தியமாயின. ஆனால் இது analog என்ற பழைய முறையில் இருந்ததால் இதற்குப் பல limitations வரையறைகள் இருந்தன.

2G என்ற இரண்டாவது தலைமுறை cellular technology வந்தபின்புதான் அதாவது digital என்ற எண்ம முறையில் அமைந்த தொழில்நுட்பம் வந்தபின்புதான் மொபைல் போன்களைப் பொறுத்த அளவில், குறுஞ்செய்திகளை அனுப்புவது உட்பட படங்களை, பின்பு வீடியோக்களை அனுப்புவது என்று ஆரம்பித்து இப்போதைய 3G மற்றும் 4G தொழில்நுட்பம் தந்திருக்கும் சௌகர்யங்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இதன் அடுத்தகட்டம்தான் அல்லது அதன் பரிணாம வளர்ச்சிதான் 5G தொழில்நுட்பம்.

1G தொடக்கம் 4G வரையிலான தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தியபோது அல்லது பயன்படுத்துகிறபோது, இதன் காரணமாகப் பரவும் radiation என்ற ரேடியோ கதிரலைகள் பற்றி பெரிதாக நாம் கண்டுகொள்ளவில்லை அல்லது கவலைப்படவில்லை. ஆனால் இப்போது 5G தொழில்நுட்பம் மட்டும் மனித உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பதட்டப்படுவதன் பின்னணி என்ன?

PIXABAY
Source: Pixabay

Flow of electricity மின்கடத்தல் நிகழும்போது, அதை அண்மித்த பரப்பில் EMF என்ற electromagnetic field உருவாகிறது. இது hertz என்ற அலகால் அளக்கப்படும். மின்சாரத்தை இடத்திற்கிடம் கொண்டு செல்லும் powerlines என்ற மின்கம்பிகள் சிந்தும் electro magnetic field இன் அளவு 50 தொடக்கம் 60 hertz ஆகும். Spectrum என்ற கதிர் நிரலில் 30 k hertz தொடக்கம் 300 Ghertz வரையில் electromagnetic field அலைகளைக் கடத்துகின்றன. ஆகவே 50 அல்லது 60 hertz அலைகளைக்கடத்தும் வானொலி அலைகள், infra red அலைகள் வீட்டுக்கு ஒளிவழங்கும் மின் பல்புகளின் அலைகள் மற்றும் ultra violet அலைகள் என்பன மனிதர்க்கு பாதிப்பை ஏற்படுத்தாத nonionizing radiation எனப்படுகிறது.

கதிர் நிரலில் இதற்கு அடுத்த நிலையிலுள்ள x-rays மற்றும் gamma rays என்பன ionising radiation என்ற கதிர்கள் மனித கலங்களைப் பாதிக்கக் கூடியவை. இதனால்தான் வைத்திய காரணங்களுக்காக x-ray எடுக்கும்போது நோயாளியைத்தவிர வேறுயாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. நோயாளிகளும் அத்தியாவசியம் என்றால் ஒழிய x-ray எடுக்கக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. சூரியனில் இருந்து வரும் கதிரலைகள் கூட உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே skin cancer அல்லது melanoma என்ற தோல்புற்று நோய் ஏற்படுகிறது.

Electromagnetic spectrum த்தில், குறைந்த wavelength அலைவரிசையில் இல் வரும் கதிர்கள் சக்தி குறைந்தவை. Smaller wavelength higher frequency இல் வருபவை சக்தி மிக்கவை. ஆகவே இவை ionising and non ionising என்று பிரிக்கப்படுகிறது. X rays gamma rays என்பன ultra violet rays உயிரினங்களின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இவை சிந்தும் Ionising radiation காரணமாக அணு பகுக்கப்படுவதற்கும் DNA இல்உள்ள வேதியல் bond உடைக்கப்படுவதற்கும் இதன் காரணமாக கலங்கள் பாதிப்படைந்து மனிதர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கும் சாத்தியங்கள் உண்டு.

wikimedia
Source: Wikimedia

Non ionising radiation DNA இன் வேதியல் bond ஐ உடைக்க வல்லன அல்ல. இதனால்தான் வானொலி அலைகள், FM ரேடியோ, TV signal, மற்றும் 3G மற்றும் 4G cellphones பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதேபோல, micro wave, Wi fi routers, garage door remote openers, airport security scanners, என்பனவும் lower frequencies இல் வரும் கதிரலைகளைக் கொண்டிருப்பதால் பாதுகாப்பானவையாகவே கருதப்படுகின்றன.

WHO அமைப்பு 2011 ஆம் ஆண்டு தனது அறிக்கையில் இந்த கதிரியக்கம் மனிதர்க்கு புற்று நோயை ஏற்படுத்தக்கூடும் என்றபோதும் இதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்றே கூறியது. இப்படிப்பார்த்தால் காப்பித்தூள், pickled vegetables என்ற ஊறுகாய்கள என்பவை கூட carceogenic - புற்றுநோயை ஏற்படுத்தவல்லன என்றும் சிலரால் வாதிடப்படுகிறது.

5G பற்றி மட்டும் இவ்வளவு பதட்டம் ஏன்?

கதிர் நிரலில், மத்திய அலைகளான 2.5 , 3.5,3.7, 4.2 GHz இல் ஆரம்பத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் 5G பயன்படுத்தப்பட்டாலும், AT&T மற்றும் Verizon போன்ற நிறுவனங்களும் பல மேற்குலக நாடுகளும் higher frequency ஐ பயன்படுத்தவே திட்டமிடுகின்றன. இதற்குக்காரணம் 5G க்காக super higher frequency பயன்படுத்தப்படும் போது அதன் ஆற்றல் வெகுவாக அதிகரிக்கிறது. ஆனால் மத்திய அலைகளைப் பயன்படுத்தும் 4 G யின் சிறப்பு என்னவென்றால், கதிரலைகள் தடையின்றி பல கி.மீ தூரம் பயணிக்கும் என்பதுதான். ஆனால் high frequency ஐப் பயன்படுத்தும் 5G ஆற்றல் மிக்கது என்றபோதும், அது செல்லக்கூடிய தூரம் சில நூறு மீட்டர் தூரம்தான். அத்தோடு, கட்டடங்கள், சுவர்கள், மரங்கள், கிளைகள் என்பவற்றை ஊடறுத்து செல்லும் ஆற்றல் 5 G க்கு இல்லை. இதனால் 200 /300 மீட்டர் தொலைவுகளுக்கிடையே பல repeater அல்லது relaying towerகளை- அலைபகிரும் கோபுரங்களை நிறுவ வேண்டும். இதனால் அலைபகிரும் கருவிகளை தெருவிளக்குக் கம்பங்கள் உட்பட பல இடங்களில், வீடுகளுக்கு அருகாமையில் பொருத்தவேண்டும். அலைபகிரும் கோபுரங்களை அல்லது கருவிகளை மக்கள் செறிவாக வாழும் இடங்களில் அமைப்பது ஆபத்தானது என்ற வாதம் இப்போது பல நிபுணர்களாலும் முன்வைக்கப்படுகிறது.

PUBLIC DOMAIN
Source: Public domain

ஆகவே 5 G க்கு எதிரான இரண்டு மிகப்பெரிய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஒன்று: 5G பயன்படுத்தும் super high frequency மனித நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டு: super high frequency கதிரலைகளைப் பகிர எண்ணற்ற அலைபகிரும் கோபுரங்கள் அமைக்கவேண்டி இருப்பதால் அது மிகப் பெரிய பாதிப்பை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் என்பது.

5G பாதுகாப்பனது என்பது உறுதியாகும்வரை 5 G தொடர்பான எல்லாப் பணிகளும் நிறுத்தப்படவேண்டும் என்று பல அமைப்புகளும், சில நிபுணர்களும், அரசியல்வாதிகளும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். சமூக ஊடகங்களில் இது தொடர்பாகப் பெரிதும் பேசப்பட்டுவருகிறது. மொபைல் போன் கதிரலைகள் மனித உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் bio chemistry and basic medical sciences என்ற துறையில் பணியாற்றும் பேராசிரியர் Martin Pall சொல்கிறார்.

ஆஸ்திரேலியாவில் 5G coverage - சேவையை வழங்கவிருக்கும் Telstra நிறுவனம், ஏற்கனவே 32 நகரங்களுக்கு 3.6 GHz அலைவரிசையில் இதை விரிவுபடுத்தியுள்ளது. மேலும் 35 நகரங்களுக்கு higher frequency ஆன 26 GHz அலைவரிசையில் விரிவுபடுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. தாம் செய்துள்ள பரிசோதனைகளின்படி இந்த 5 G காரணமாக பரவும் electromagnetic radiation கதிரலைகளின் தாக்கம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 1000 மடங்கு குறைவானது என்றும் இது இங்கு 3G மற்றும் 4G காரணமாக வெளியேறும் கதிரலைகளுக்குச சமமானது என்றும் Telstra நிறுவனம் சொல்கிறது.

5G கதிரலைகளின் பாதிப்பு தொடர்பாக பலர் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

Flickr
Source: Flickr

தான் இது தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவருவதாகவும், மொபைல்போன் radiation காரணமாக மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பெனிஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் Bio Engineering துறையில் பணியாற்றும் பேராசிரியர் Kenneth Foster சொல்கிறார்.

இந்த வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, கடந்த 20 வருடங்களுக்கு மேல் நடத்தப்பட்டுள்ள ஆய்வுகள் 3G மற்றும் 4G தொடர்பானவை மட்டுமே என்றும் 5G தொடர்பாக போதுமான ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்றும் பல மட்டங்களிலும் சொல்லப்படுகின்றது. இதுவரை 5 G தொடர்பாக நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளில் இருந்து , பொதுவாக மனிதர்க்கு இந்த கதிரலைகளால் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும் 5 G தொடர்பாக மேலும் பல ஆய்வுகள் முறைப்படியும், 5G உபகரணங்களை மற்றும் கருவிகளைச் சந்தைப்படுத்துவோரின் தலையீடின்றியும் பக்கச்சார்பற்ற முறையில் நடத்தப்படவேண்டும் என்பதில் பல நிபுணர்கள் ஏகோபித்த கருத்துள்ளவர்களாக இருக்கிறார்கள்.

ஆகவே 5G வரமா அல்லது சாபமா என்ற முடிவை எடுப்பதற்கு இன்றைய நிலையில் போதுமான தரவுகள் மற்றும் சான்றுகள், ஆதாரங்கள் இல்லை என்றே பலரும் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now