ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மாநிலமான New South Wales மாநிலத்தில் கிறிஸ்துமஸ் விழா துவங்கிய டிசம்பர் 25 ஆம் தேதி முதல் நேற்றுவரை (டிசம்பர் 30) என்று கடந்த ஆறு நாட்களில் கடலில் நீந்தி விளையாடச் சென்றவர்களில் 14 பேர் உயிர் இழந்தனர் என்று போலீசார் உறுதி செய்துள்ளனர். நேற்று மட்டுமே மூவர் இறந்தனர் என்றும், முன்பு இறந்தவர்களின் இரு சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன என்றும் போலீசார் கூறியுள்ளனர். நேற்று இறந்தவர்களில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த 27 வயது நபர் என்று கூறப்படுகிறது.
நீச்சல் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், கடலில் விளையாடுகின்றவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்றும், கடற்கரையில் Surf Life Saving யின் கொடி கட்டப்பட்டிருக்கும் இடைப்பட்ட பகுதியில் மட்டுமே மக்கள் விளையாடவேண்டும் என்றும் Surf Life Saving New South Wales அமைப்பு மக்களை எச்சரித்துள்ளது.குறிப்பாக குடியேற்றவாசிகள் (migrants) எச்சரிக்கை விதிமுறைகளை அறிந்துவைத்திருக்கவேண்டும் என்றும், இந்த எச்சரிக்கை நடவடிக்கையை அவர்கள் பின்பற்றவேண்டும் என்றும் Surf Life Saving கேட்டுக்கொண்டுள்ளது.
Share
