தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு: இந்தியா செல்பவர்களுக்கான புதிய அறிவிப்பு!

travel

Air India is currently operating non-stop flights between Sydney and New Delhi. Source: PUNIT PARANJPE/AFP via Getty Images

இந்தியாவுக்கு வருகின்ற அனைத்துப்பயணிகளும் ஏழு நாட்களுக்கு வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அரசு விடுத்துள்ள புதிய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டபின் எட்டாவது நாள் PCR சோதனையை மேற்கொண்டு அதன் முடிவினை Air Suvidha portal ஊடாக சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்குள் PCR சோதனை மூலம், பயணிகள் தங்களுக்கு கோவிட் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து, உரிய ஆவணத்தைப் பெற்று அதனையும் Air Suvidha portal-ஊடாக சமர்ப்பித்திருக்க வேண்டும். அத்துடன்  self-declaration form-ஐயும் பயணத்திற்கு முன்னதாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்தியாவிலும் பெருகி வருகின்ற கோவிட் தொற்றினை அடுத்து, சுகாதார அமைச்சு  விடுத்துள்ள புதிய அறிவிப்பில் மேற்படி நிபந்தனைகள் உட்பட பல்வேறு பயண ஒழுங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுப்பாடுகள் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

2 min read

Published

Updated

Presented by Renuka



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now