மெல்பேர்ணைச் சேர்ந்த Joan Oliver, தனது 70வது வயதில் விக்டோரியா மாநிலத்தின் 12ம் ஆண்டு பரீட்சையான VCE (Victorian Certificate of Education) பரீட்சை எழுதுகின்றார்.
சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயாரின் கட்டளைக்கிணங்க படிப்பை நிறுத்திவிட்டு தொழிற்சாலை வேலை ஒன்றுக்குச் சென்றிருந்ததாகவும், ஆனால் எப்படியாவது பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டுமென்ற ஆசையே இப்போது பரீட்சை எழுதுவதற்குக் காரணமெனவும் Joan Oliver, 9News இடம் தெரிவித்தார்.
எத்தனை வயதில் எழுதினாலும் பரீட்சை என்றாலே பயமாகவும் பதற்றமாகவுமே இருப்பதாகக் கூறும் Joan Oliver, VCE
பரீட்சையுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்தும் பல்கலைக்கழகம் சென்று Criminal Justice துறையில் பட்டம் பெற எண்ணியிருப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை விக்டோரியா மாநிலத்தின் வயதுகூடிய ஆண்டு-12 மாணவி இவரென்பது குறிப்பிடத்தக்கது.
