நியூயோர்க்கில், ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமடைந்த ஆஸ்திரேலிய இராஜதந்திரி Julian Simpson-க்கு பிரதமர் Malcolm Turnbull உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் ஐ.நாவுக்கான இரண்டாவது செயலராக பணியாற்றிய 30 வயது Julian Simpso, தனது நண்பர்களுடன் 'Trust Game' எனப்படும் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, விளையாட்டு வினையாகி இவ்விபத்து சம்பவித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அதாவது தனது நண்பர் தான் விழுவதைத் தடுத்து தம்மைப் பிடித்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் கீழே விழுவதுபோல Julian Simpson பாவனை செய்ததாகவும், இதன்போது அவர் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் ஒரேபாலின திருமணத்திற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்ததைக் கொண்டாடும் வகையில், வானவில் வர்ணங்களால் ஒளியூட்டப்பட்டிருந்த Empire State கட்டடத்தைப் பார்த்து மகிழ்ந்த சிறிது நேரத்தில் இவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
