SKIP TO MAIN CONTENT

ஐம்பது வருடங்களின் பின்னர் ஆஸ்திரேலிய காதலியுடன் இணையும் இந்திய நபர்!

officialhumansofbombay/Instagram
Source: officialhumansofbombay/Instagram

2 min read

Published

Updated


Skip to article content

ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஆஸ்திரேலிய பெண்ணோடு காதலில் விழுந்த இந்திய நபர் சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு- 82 ஆவது வயதில்- தனது காதலியுடன் மீண்டும் தொடர்புகிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இந்தக்காதல் கதை மிகுந்த பரபரபப்பாக பேசப்பட்டு பகிரப்படுகிறது.

எழுபதுகளில் ராஜஸ்தானின்  Jaisalmer என்ற இடத்துக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலியப்பெண் மரீனாவுக்கு அப்போது முப்பதுகளிலிருந்த குறிப்பிட்ட நபர் ஓட்டகம் ஓட்டக்கற்றுக்கொடுத்துள்ளார். பார்த்தவுடனேயே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மரீனா அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பும் முன்னர், தனது காதலைத் தெரிவித்திருக்கிறார். ஒட்டகப்பயிற்றுனரும் அந்தக்காதலை உணர்ந்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு வந்த மரீனா கடிதங்கள் வாயிலாக தனது காதலைத் தொடர்ந்திருக்கிறார். ஒட்டகப்பயிற்றுனரை ஆஸ்திரேலியாவுக்கும் அழைத்திருக்கிறார். அவர் முப்பதினாயிரம் ரூபாவை வட்டிக்கு கடனாக எடுத்துக்கொண்டு மெல்பன் வந்து இறங்கியிருக்கிறார். சுமார் மூன்று மாதங்களாக மரீனாவுடன் மெல்பனிலிருந்த ஒட்டகப்பயிற்றுனர், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மரீனா கேட்டபோது அதற்கு தயங்கி, காதலை முறித்துக்கொண்டு இந்தியாவுக்கு திரும்பிச்சென்றுவிட்டார்.

இது நடந்து சில ஆண்டுகளின் பின்னர் இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட குறிப்பிட்ட நபரின் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள். அவர்களுக்கு தற்போது திருமணமாகி தனித்தனிக்குடும்பமாகிவிட்டார்கள்.

தற்போது மரீனாவிடமிருந்து மீண்டும் தொடர்புகிடைத்துள்ளதாகக் கூறும் முன்னாள் ஒட்டகப்பயிற்றுனரும் தற்போது காவலாளி உத்தியோகம் செய்பவருமான 82 வயது நபர், தனது பழைய காதலியிடமிருந்து தொடர்புகிடைத்திருப்பது சிலிர்ப்படைய வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்னமும் திருமணம் செய்யாத மரீனா, விரைவில் இந்தியா வரவுள்ளதாக  ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் இந்த அதிஷ்டக்கார ராஜஸ்தான் முதியவர்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now