SKIP TO MAIN CONTENT

87 பிரிவுகளில் Commonwealth வங்கி மீது குற்றவியல் வழக்கு!

BANKING STOCK
Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

நேர்மையற்ற வகையில் வாடிக்கையாளர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு காப்புறுதி திட்டங்களை விற்பனை செய்தது என்ற குற்றச்சாட்டின் பேரில் Commonwealth வங்கியின் முன்னாள் காப்புறுதி கிளை (CommInsure) குற்றவியல் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துள்ளது.

வங்கிகளுக்கு எதிராக நடைபெற்ற royal commision விசாரணைகளில் தெரியவந்த இந்த விவகாரம் பாரதூரமான குற்றமாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

Commonwealth வங்கி தனது காப்புறுதி திட்டத்தை விற்பதற்கு Aegon Insights Australia என்ற நிறுவனத்திடம் வாடிக்கையாளர் விவரங்களை வழங்கியிருக்கிறது. Aegon Insights Australia நிறுவளம் இந்த காப்புறுதி திட்டங்களை விற்பதற்கு தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு நேர்மையற்ற வகையில் - காப்புறுதி விற்பனை செய்திருக்கிறது என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனம் இந்த காப்புறுதி திட்டங்களை விற்பனை செய்வதற்கு கையாண்ட வழிமுறைகள் சட்டவிரோதமானவை என்றும் வாடிக்கையாளர்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய அறமற்ற செயல் என்றும் royal commision விசாரணையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

நீதிமன்றதுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள இவ்வகையான சுமார் 87 குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டால் 18 லட்சம் டொலர்கள் வரையான தொகை தண்டப்பணமாக அறவிடப்படும் சாத்தியமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now