SKIP TO MAIN CONTENT

மகனை சுட்டுக் கொன்ற 92 வயது தாய்

72 வயதான தனது மகன், தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட போவதாக கூறியதினால் அவரை சுட்டு கொன்றுள்ளார் 92 வயதான அவரின் தாய்

Anna Mae Blessing
Source: Public Domain

1 min read

Published

Updated

By Selvi



Skip to article content

அமெரிக்காவில் தன்னை முதியோர் பராமரிப்பு இல்லத்தில் விட்டுவிட போவதாக கூறிய தனது 72 வயது மகனை சுட்டு கொன்ற 92 வயது மூதாட்டி Anna Mae Blessing தற்போது சிறைசாலையில் அடைக்கப்பட்டு, அவரது வயது காரணமாக அங்குள்ள மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவத்திற்கு பிறகு அவரது வீட்டிலிருந்து 13 துப்பாக்கிகள் கைபற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தாய்க்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு மகனின் படுக்கை அறைக்கு சென்ற Anna தன்னிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகளை கொண்டு மகனை சரமாரியாக சுட்டுள்ளார். அதன் பின் மகனின் துணைவியையும் சுட முயற்சித்த போது அவர் Annaவை தள்ளி விட்டு தப்பித்து சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தன்னை சிறையில் அடைக்காமல் உடனே கொன்று விடும்படி போலீசாரிடம் 92 வயது மூதாட்டி Anna கூறியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now