SKIP TO MAIN CONTENT

94 வயதில் முனைவர் பட்டம் பெற்று ஆஸி. முதியவர் சாதனை!

ABC- Jaimi Chisholm
Source: ABC- Jaimi Chisholm

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில் அதிகூடிய வயதில் PhD-கலாநிதி பட்டத்துக்கான படிப்பை கற்று நிறைவு செய்தவர் என்ற சாதனை கடந்த செவ்வாய்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலைநாட்டப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் Curtin பல்கலைக்கழகத்தில் கடந்த ஏழு வருடங்களாக பகுதி நேரமாக கல்வி கற்று தனது 94 வயதில் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்ட David Bottomley இந்த சாதனையயை தனதாக்கிக்கொண்டுள்ளார்.

1816 முதல் 1885 வரையான பாடத்திட்டத்தில் விஞ்ஞானத்தை அறிமுகப்படுத்திய ஐந்து ஆசிரியர்களின் கற்பித்தல் வழிமுறைகள் தொடர்பில் அவர் தனது ஆய்வை நிறைவுசெய்திருந்தார்.

மெல்பேர்னில் தனது மனைவியுடன் வசித்துவரும் இவருக்கு 4 பிள்ளைகளும் 13 பேரன் - பேர்த்திகளும் உள்ளனர்.

இந்த கலாநிதி பட்டத்தினால்  தான் மிகவும் மனம் நிறைவடைந்துள்ளதாக கூறும் David Bottomley தனது கற்றல் நடவடிக்கையை மேலும் தொடரப்போவதாக கூறியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now