ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்துவதற்கான புதிய திட்டம்!!

இந்த ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பமாகிவுள்ள புதிய அகதிகளுக்கான சமூக sponsorship திட்டத்தின்(community refugee sponsorship program) கீழ் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் சுமார் 1,500 அகதிகள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்படவுள்ளனர்.

Shadi Al Daoud with his wife, Ramia, and their two children, George, aged 10 and Elinor, 7. (Francesca De Nuccio, SBS News).jpg

Shadi Al Daoud with his wife, Ramia, and their two children, George, aged 10 and Elinor, 7. Credit: SBS News

சமீபத்தில் இந்த திட்டத்தின் கீழ் சிரியா நாட்டை சேர்ந்த இரண்டு அகதி குடும்பங்கள் முதல் முறையாக ஆஸ்திரேலியா சிட்னியை வந்தடைந்தனர். இவர்கள் CRISP என்று சுருக்கமாக அழைக்கப்படும் Community Refugee Integration and Settlement Pilot திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

Federal அரசு Community Refugee Sponsorship Australia(CRSA)- உடன் இணைந்து இந்த CRISP திட்டத்தை முன்னெடுத்து அகதிகளை குடியமர்த்தவுள்ளது.
கனடாவில் 1970இல் இம்மாதிரியான அகதிகளுக்கான சமூக sponsorship திட்டம் செயல்முறைப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக சுமார் 325,000 அகதிகள் அந்நாட்டில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதே போன்ற திட்டம் நியூஸிலாந்து,அமெரிக்கா,UK மற்றும் Ireland போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.

ஐவர் அல்லது அதற்கு மேலதிகமான தன்னார்வலர்கள் கொண்ட குழு, ஒரு அகதி குடும்பத்திற்கு அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்த தேதியிலிருந்து 12 மாதங்கள் இங்கு குடியமர உதவிகளை வழங்கும். இந்த குழு 'சமூக ஆதரவாளர் குழு' அல்லது 'CSG' என அறியப்படுகிறது.

யார் வேண்டுமானாலும் ஒன்றிணைந்து இந்த சமூக ஆதரவாளர் குழு(CSG)ஐ உருவாக்கமுடியும். அதற்கான உதவிகளை Community Refugee Sponsorship Australia(CRSA) வழங்குகிறது. இந்த குழு ஆஸ்திரேலியாவின் எந்த பகுதியிலிருந்தும் செயல்பட முடியும். ஆனால் அந்த குழு ஒரு அகதி குடும்பத்திற்கு தகுந்த ஆதரவை வழங்குவதற்கான திறனை கொண்டுள்ளதாக இருக்க வேண்டும்.

Community Refugee Sponsorship Australia (CRSA) சமூக ஆதரவாளர் குழுக்களை ( CSG) அங்கீகரித்து, அவர்களுக்கு பயிற்சியளித்து ஆதரிக்கும். அதோடு Community Refugee Integration and Settlement Pilot (CRISP) திட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அகதிகளை இந்த சமூக குழுக்களுடன் இணைக்கும்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையத்தால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியமர்த்தப்படுவதற்காக காத்திருக்கும் அகதி குடும்பங்களே இந்த CRISP திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் குடியமர பரிந்துரைக்கப்படுவார்கள்.
ஆகவே அவர்கள் பல தரப்பட்ட நாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் மற்றும் ஒரு பாதுகாப்பான புதிய நாட்டில் மீள்குடியேறுவதற்கான வாய்ப்புக்காக நீண்ட காலமாக காத்திருந்திருக்கலாம்.

அகதிகளை தங்கள் சமூகங்களில் குடியேறுவதற்கு ஆதரவளிப்பதற்காக கைகளை உயர்த்தி வரவேற்கும் இந்த சமூக ஆதரவு குழு(CSG) பின்வரும் உதவிகளை அகதிகள் குடியமர வழங்கும்:
  • விமான நிலையத்தில் அகதிகளைச் சந்தித்து நாட்டிற்குள் வரவேற்பது
  • ஆரம்பக்காலத்தில் வருமான ஆதரவு (முதல் 1-2 வாரங்கள்) மற்றும் தற்காலிக தங்குமிடம் (4 - 6 வாரங்கள்) வழங்குதல்
  • நீண்ட கால தங்குமிட வசதிகளை செய்து கொடுத்தல்
  • அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க உதவுதல்
  • Centrelink கொடுப்பனவு பெறுவதற்கு மற்றும் மற்றைய அரச உதவி நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தருதல்
  • ஆங்கில மொழிக்கல்வி வகுப்புகளில் சேர்த்துவிடுதல்
  • பொது போக்குவரத்தை பயன்படுத்த உதவுதல் மற்றும் ஓட்டுநர் பத்திரம் எடுக்க உதவுதல்
  • வேலை தேடுவதற்கு அல்லது தொழில் ஆரம்பிப்பதற்கு உதவுதல்



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

By Selvi
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand