அன்றைய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் (Department of Immigration and Border Protection) ஒரு பகுதியாக இயங்கிய விசா செயலாக்கத்தில் பணியாற்றிய அந்த அதிகாரி 'நேர்மையற்ற முறையில் சுயலாபம் பெறும் நோக்குடன் பணியாற்றினார் என்று சட்ட ACLEI வெளியிட்ட ஊழல் விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.
விசா விண்ணப்பதாரர் விவரங்களைப் பெறுவதற்காக விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் ஸ்பான்சர்களை அவர் தொடர்புகொண்டார் என்றும் விசா வழங்குவதற்காக சட்டவிரோதமாக சுயலாபம் பெறும் நோக்குடன் அவர் பணியாற்றினார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
புதுடெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் விசா வழங்கும் பிரிவில் பணியாற்றிய விசா செயலாக்க அதிகாரி உள்ளூரிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டவர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் அவர் ஆஸ்திரேலியாவின் விசா வழங்கும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு எதிராக பல விசாக்களை வழங்கினார் என்றும் இந்த விசாரணை கண்டறிந்துள்ளது.
விசா பெற விண்ணப்பித்திவர்களின் ஸ்பான்சர்களிடமிருந்து குறைந்தபட்சம் இரண்டு சந்தர்ப்பங்களில் 'கணிசமான தொகையை' அவர் லஞ்சமாக பெற்றார் என்றும், அந்த தொகை மொத்தம் $ 9,798 (சுமார் பத்து லட்சம் இந்திய ரூபாய்) என்றும் இந்த விசாரணை கண்டறிந்துள்ளது.
Operation Swordfish என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட இந்த விசாரணை, விசா வழங்கிய அதிகாரியின் நடத்தை 'நேர்மையற்றதும் மற்றும் மோசடியானதும்' என்று கூறுகிறது.
ஆஸ்திரேலிய அரசின் உள்ளூர் விசா வழங்கும் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகம் அல்லது விசா வழங்கும் அலுவலகங்களில் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்க 2017 இல் Australian Commission for Law Enforcement Integrity (ACLEI) பணிக்குழுவால் “ஆபரேஷன் ஸ்வர்ட்ஃபிஷ்” (Operation Swordfish) நடவடிக்கை எனும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசா வழங்குவதில் முறைகேடில் ஈடுபட்ட அந்த அதிகாரியை ஒரு விண்ணப்பதாரர் அளித்த புகாரைத் தொடர்ந்து புது டெல்லியிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகம் 2018 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்தது.
