ஆஸ்திரேலிய படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டதாக கூறப்படும் படுகொலைகளை அம்பலப்படுத்திய ABC நிறுவனத்தின் Four Corners புலனாய்வு செய்திக்குழு மற்றும் அதன் ஊடகவியலாளர் Mark Willacy-க்கு ஆஸ்திரேலியாவின் உயர் ஊடக விருதான Gold Walkley விருது கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வருடாந்தம் நடைபெறுகின்ற Walkley Awards என்ற நாட்டின் உயர் ஊடக விருது வழங்கும் நிகழ்வில், Four Corners-இன் Killing Field நிகழ்ச்சி சிறந்த புலனாய்வு செய்தி சேகரிப்பு பணிக்கான(Investigative Journalism) விருதினையும் பெற்றது.
ஆஸ்திரேலிய படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டதாக கூறப்படும் படுகொலைகள் குறித்த அரசு விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டபோதும், Killing Field நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட கணொளியில், ஹெலிக்கொப்டர் ஒன்றிலிருந்து வயல் வெளியினுள் இறங்குபவர்கள், சிலரை கலைத்துச்சென்று சுட்டுக்கொல்லும் சம்பவம், ஆஸ்திரேலிய விசாரணைகளை மேலும் கூர்மைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
