புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) இன்று காலமானார். அவருக்கு வயது 76.

British scientist Stephen Hawking (L) and his daughter Lucy Hawking (R) arrive on the red carpet for the 2015 British Academy Film Awards

British scientist Stephen Hawking (L) and his daughter Lucy Hawking (R) arrive on the red carpet for the 2015 British Academy Film Awards Source: AAP

1942ம் ஆண்டு, ஜனவரி 8ம் நாள் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்த இவர், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக கடமையாற்றினார்.  இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளைகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன. கருந்துளையினுள் ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின.  இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

British astrophysicist Stephen Hawking in 1989 at the age of 47 at Cambridge University (AAP)
British astrophysicist Stephen Hawking in 1989 at the age of 47 at Cambridge University (AAP) Source: AAP

21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் இவர் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராக இருந்தார்.

File image of Stephen Hawking
File image of Stephen Hawking Source: AAP

அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இத்த சிறந்த படைப்பை உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.  இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time), The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன.  சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந் நூல்கள் பலரையும் கவர்ந்தன.  தமது பெயரைக் காப்புரிமை செய்துள்ள ஸ்டீபன் ஹாக்கிங் எம்மை விட்டுப் பிரிந்திருக்கும் செய்தி, விஞ்ஞான உலகை மட்டுமல்ல அனைவரிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

 


2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now