SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான சோதனை மற்றும் நேர்காணல்கள் மீண்டும் ஆரம்பம்!

Australian Citizenship
گواهی‌نامه شهروندی آسترالیا Source: Supplied

2 min read

Published


Skip to article content

ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கான சோதனை மற்றும் நேர்காணல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த குடியுரிமை சோதனை மற்றும் நேர்காணல்கள் பிரிஸ்பன்,பெர்த், அடிலெய்ட், சிட்னி ஆகிய இடங்களில் கடந்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் கன்பரா, ஹோபார்ட், டார்வின் ஆகிய இடங்களில் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன என்றும் குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் - பெருந்தொகையானவர்கள் - சுமார் இரண்டு லட்சத்து நாலாயிரம் பேர்-ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொண்டார்கள். கொரோனா தொற்று அச்சம் காரணமாக குடியுரிமை வழங்கும் நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த காரணத்தினால் இவர்களில் சுமார் 73 ஆயிரம் பேருக்கு இணைய வழி நிகழ்வுகளின் மூலம் குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதுதவிர அரசாங்க புள்ளிவிவரங்களின்படி குடியுரிமை சோதனை மற்றும் நேர்காணல்களுக்கு காத்திருப்பவர்கள் உட்பட சுமார் ஒன்றரை லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தற்போது தேங்கிக்கிடப்பதாக  தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 35 ஆயிரம் பேர் குடியுரிமை வழங்கும் நிகழ்வுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை ஐம்பதினாயிரத்தினால் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மெல்பேர்னில் குடியுரிமை வழங்குவது தொடர்பான நேர்காணல்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now