ஜனவரி முதலாம் திகதி முதல் Age Pension- ஓய்வூதியத்தில் கொண்டுவரப்படும் மாற்றத்தால் 330,000 ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்படுவர் என குறிப்பிடப்படுகின்றது.
2017 ஜனவரி 1 முதல் ஒருவரின் ஓய்வூதியத் தொகை அவரிடம் இருக்கும் சொத்துக்களை அடிப்படையாக வைத்து அதாவது The Age Pension assets test என்ற மீளாய்வு செய்யப்பட்ட முறையின் கீழ் கணிப்பிடப்படவுள்ளது.
இதனடிப்படையில் நாடு முழுவதுமுள்ள 171,500 பேர் தமது ஓய்வூதியத் தொகையுடன் 30 டொலர்கள் (fortnight) அதிகம் பெறவுள்ளனர்.
அதேநேரம் 236,000 part-pensioners- க்கான கொடுப்பனவு குறைக்கப்படவுள்ளதுடன் 91,000 part-pensioners எவ்வித கொடுப்பனவுகளையும் பெறமாட்டார்கள்.
இப்புதிய நடைமுறை காரணமாக, முதியவர்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கான ஆதரவு கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக, இறுதியாக வெளியான கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது.

Source: Table
Share
