SKIP TO MAIN CONTENT

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் அகதி!

Incoming UN human rights chief Michelle Bachelet speaks during the 71st session of the United Nations General Assembly.
Incoming UN human rights chief Michelle Bachelet speaks during the 71st session of the United Nations General Assembly. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet தான் ஆஸ்திரேலியாவின் முன்னாள் அகதி என்று ஆஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் Michelle Bachelet எழுபதுகளில் அந்நாட்டின் சர்வாதிகார ஆட்சியாளரின் பிடியிலிருந்து வெளியேறி 1975 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக தஞ்சம் கோரி வந்திருந்திருந்தார். பின்னர், ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அங்கு பல காலம் வாழ்ந்தார்.

Michelle Bachelet தான் ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி வந்தபோது ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை மிக நெகிழ்சியுடன் காணப்பட்டதாகவும் அடைக்கலம் வழங்கும் தேசமாக காணப்பட்டதாகவும் கூறினார். தற்போது ஆஸ்திரேலியா அகதிகள் விவகாரத்தில் காண்பிக்கும் இறுக்கமான போக்கு குறித்து அவர் கூறும்போது - இது வித்தியாசமாக உள்ளதாகவும் அகதிகளின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் மதிப்பளிக்கும் விதத்தில் ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக பதவி வகித்த Zeid Raad Al Hussein கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வுபெற்றதையடுத்து  அவரது இடத்துக்கு Michelle Bachelet நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now