நியூ சவுத்வேல்ஸ் மாநிலம் Cooma பகுதியின் வடகிழக்கில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட air tanker விபத்துக்குள்ளானதில் 3 அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இச்செய்தியை நியூ சவுத்வேல்ஸ் Premier Gladys Berejiklian உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்தில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த Hercules C-130 விமானம் Coulson நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் கடந்த பல ஆண்டுகளாக தீயணைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில் என்ன காரணத்தினால் விபத்து இடம்பெற்றது என்ற தகவல் இன்னமும் வெளியாகவில்லை.
இதேவேளை இவ்விமான விபத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Coulson நிறுவனம் பெரிய தீயணைப்பு விமானங்களை தரையிறக்கப்பட்டுள்ளன.
