ஆகாயத்திலிருந்து பரசூட் மூலம் பாய்ந்து(Skydiving) அடிலெய்ட் பாட்டி ஒருவர் உலக சாதனை படைத்திருக்கிறார்.
உலகின் அதிகூடிய வயதுப்பெண் ஒருவர் படைத்த வரலாற்றுச்செயல் என்று இந்தச்சம்பவம் சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
அடிலெய்ட்டைச் சேர்ந்த 102 வயதுடைய Irene O'Shea என்பவரே இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது நூறாவது வயதிலும் Irene O'Shea இதேபோல ஆகாயத்திலிருந்து பரசூட் மூலம் பாய்ந்து சாதனை படைத்திருந்தார்.
பாட்டியுடன் பாய்ந்த பாட்டியின் பயிற்றுவிப்பாளர் இந்தச்சாதனை குறித்து பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
பாட்டியின் மகன் கூறும்போது தனது தாயார் ஒரு முடிவெடுத்தால் அதன் வழி சென்று செயலை முடித்துவைப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.
Irene O'Shea அவர்கள் தனது இந்த வீரசாகசம் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தினை தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார்.
Share
