நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவர் என்ற அறிவிப்பை ஆஸ்திரேலிய அரசு நாளை வெளியிடும் வாய்ப்பு இருப்பதாக ABC செய்திதெரிவிக்கிறது.
ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிவந்த நிலையில் நவுறு மற்றும்மனுஸ் தீவில் தங்கவைக்கப்பட்டு அகதிகள் என்று அடையாளம் காணப்பட்ட சுமார் 1300 பேர் இவ்வாறு அமெரிக்காவில்குடிமர்த்தப்படலாம் என அச்செய்தி கூறுகின்றது. அகதிகள் என்று அடையாளம் காணப்படாதவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா இது தொடர்பாக செய்துகொள்ளவிருக்கும் ஒப்பந்தத்தை ஆதரிக்க எதிர்கட்சியான லேபர் கட்சி முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் உதவியுடன் Costa Rica நாட்டில் நடத்தப்படும் அகதி முகாம்களிலிருந்து அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த பிரதமர் Malcolm Turnbull ஒத்துக்கொண்டிருப்பதையடுத்து ஆஸ்திரேலியாவின் உதவியுடன் நவுறு மற்றும்மனுஸ் தீவில் உள்ள அகதிகளை தமது நாட்டில் குடியமர்த்த அமெரிக்கா இணங்கியிருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
Share
