பப்புவா நியூகினியின் மனுஸ் தீவிலுள்ள ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்புமுகாம், அக்டோபர் 31ம் திகதியுடன் மூடப்படவுள்ளநிலையில், உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், விரைவில் தமது நாடுகளுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டவர்கள் விரும்பினால் நவுறுவுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் அவர்கள் மனுஸிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எனினும் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்கள், தாமாகவே முன்வந்து தமது நாடுகளுக்குத் திரும்பவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதைச் செய்யத் தவறும்பட்சத்தில் அவர்களை வலுக்கட்டாயமாகத் திருப்பியனுப்பும்பணி விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் Michaelia Cash தெரிவித்தார்.
