நவுறு வாழ் மக்கள், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இலவச உளவள மேம்பாட்டுசேவைகளை வழங்கிய Doctors Without Borders ஊழியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு நவுறு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அங்குள்ளவர்களின் நிலை மேலும் மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது.
நவுறுவில் கடந்த 2017 நவம்பர் முதல் வழங்கப்பட்டுவந்த இலவச மனவள மேம்பாட்டு உதவிகள் இனித் தேவையில்லை என்பதால் அவர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Doctors Without Borders ஊழியர்கள் நவுறு மருத்துவமனை மற்றும் வீடுகளில் வழங்கிவந்த உளவள சேவைகளை நிறுத்துவதற்கு 24 மணிநேர கெடு விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் நவுறு தீவிலுள்ளவர்களுக்கு எப்படியாவது மனவள உதவிகளை வழங்குவதற்கான மாற்றுவழிகள் குறித்து ஆராய்ந்துவருவதாக Doctors Without Borders அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, நவுறு தீவிலுள்ளவர்களுக்குத் தேவையான உடல் மற்றும் மனவள உதவிகளை யார் ஊடாக வழங்குவது என்பது அந்நாட்டு அரசின் தெரிவுக்குட்பட்டது என கூறியுள்ளது.
