அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தப் போவதாக அறிவித்திருக்கும் ஆஸ்திரேலிய அரசு, மேலும் அகதிகளை மலேசியாவிலும் குடியமர்த்த மலேசிய அரசுடனும் பேச்சுவார்த்தைகளை துவங்கி அந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை அடைந்திருப்பதாக செய்தி கசிந்துள்ளது.
குறிப்பாக பெரு நாட்டில் நடந்துவரும் Asia-Pacific Economic Cooperation (APEC) மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் பிரதமர் Malcolm Turnbull-ம் மலேசியா நாட்டின் பிரதமர் Najib Razak ம் நேற்று தனியே சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளனர். வர்த்தகம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்டாலும், அகதிகளை மலேசியாவில் குடியமர்த்துவது குறித்து அதிகமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அகதிகளைக் குடியமர்த்த மலேசியாவுடன் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்துகொள்வது குறித்து பேசப்பட்டதா இல்லையா என்பதை உறுதி செய்ய பிரதமர் Malcolm Turnbull மறுத்துவிட்டார். மேலும், புகலிடம் கோருவோருக்கான தடுப்பு முகாம்களிலுள்ள பெண்கள், குழந்தைகள் என்று இவர்களை எவ்வளவு விரைவாக குடியமர்த்த இயலுமோ அவைகளை அரசு துரிதமாக செய்வதாக குடிவரவுத்துறை அமைச்சர் Peter Dutton கூறினார்.
Share
