அகதிகளை தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்கான உதவித்திட்டத்துக்கு புதிய அரசாங்கம் ஒரு லட்சம் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிதி கடல்கடந்து மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கும் பயன்படுத்தப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா முழுவதும் தற்கொலைகைளை தடுப்பதற்கு அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள நான்கு திட்டங்களுக்கு நான்கு லட்சம் டொலர்களை ஒதுக்கீடு செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா ஒரு லட்சம் டொலர் நிதியை ஒதுக்கீடு செய்வதாக அண்மையில் விக்டோரியாவில் இடம்பெற்ற சந்திப்பில் கூறிய சுகாதார அமைச்சர் Greg Hunt, பொதுமக்கள் பாதுகாப்பின் சகல தளங்களிலும் லிபரல் அரசு கவனமெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
லிபரல் கூட்டணி அரசாங்கம் ஆட்சிப்பிடமேறியது முதல் சுமார் ஐம்பது அகதிகள் மனுஸ்தீவில் தற்கொலை முயற்சியில் அல்லது தங்களுக்கு தாங்களே காயங்களை விளைவிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர் என்று அங்கிருந்து வெளியாகிய தகவல்கள் தெரிவித்திருந்தமை தெரிந்ததே.
என்ன காரணங்களுக்கு தற்கொலையை நாடினாலும் அல்லது தங்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு முயற்சித்தாலும் அந்த மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அமைச்சர் Greg Hunt கூறியுள்ளார்.
Share
