Space2b என்பது ஒரு திறந்த வடிவமைப்பாளர்களுக்கான கடை. இது அகதிகள் மற்றும் புதிதாகப் புலம்பெயர்ந்து வந்தோர் தமது சொந்த வடிவமைப்புக்களை தயாரிக்க உதவுவதோடு அவற்றை அவர்கள் இக் கடையில் சந்தைப்படுத்தலாம். இதன்மூலம் புதிதாகப் புலம்பெயர்ந்து வந்தோர் மற்றும் அகதிகளுக்கு அவர்களின் நிதி நிலையில் ஒரு பலத்தை உருவாக்க முனைவதே இதன் நோக்கமாகும்.
இரு நகர்வுக் கடைகளாக ஆரம்பிக்கப்பட்ட Space2b இப்பொழுது ஒரு நிரந்தரக் கடையாகவும் ஒரு காட்சியகமாகவும் பரிணாமம் பெற்றுள்ளது. Melbourne இல் St Kilda வில் அமைந்துள்ள இக்கடையின் உருவாக்கத்துக்கு முன்னின்றவர்கள் Janine Laurie and Mariam Issa ஆகிய இரு பெண்கள்.
Afghanistan, Somalia, Chile, Myanmar, எனப் 12 இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தோர் இதில் பங்குபற்றி பலன் பெறுகிறார்கள். ஆனால் இக் கடை இன்னும் முழு வீச்சில் இயங்கத்தொடங்கவில்லை.
இதில் பங்குபற்றும் புலம் பெயர்ந்தோருக்கு அவர்களின் தரத்தை உயர்த்தும் நோக்குடன் உள்ளூர் வடிவமைப்பாளர்கள் பயிற்சியளிக்க முன்வந்துள்ளார்கள். அத்துடன் உளூர்ப் பாடசாலை ஒன்று மற்றும் ஒரு நூலகம் ஆகியவை Space2b யில் கொள்வனவுக்கு உடன்பட்டுள்ளன. இது அவர்களுக்கான ஒரு வெற்றியாகும்.
Space2b யின் அடுத்த இலக்கு ஒரு Cafe, அதாவது ஒரு சிறிய உணவகத்தை ஈரான் நாட்டு வர்த்தகர் ஒருவருடன் இணைந்து ஆரம்பிப்பதாகும். அத்துடன் புதிதாக வந்தவர்களுக்கு work experience - தொழில் அனுபவம் வழங்கவும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Space2b is an open social design store, established to empower refugee and new arrival communities to create their own work, and become financially independent.
It's gone from two pop-ups to a permanent store and gallery, and the social enterprise now hopes to crowd-fund its seed-funding, allowing it to operate on its own.
