SKIP TO MAIN CONTENT

அகதிகள் தொடர்பிலான கூடுதல் பொறுப்பு Peter Dutton வசம்!

Minister for Home Affairs Peter Dutton speaks to the media in Brisbane, Thursday, May 30, 2019. Mr Dutton was asked about a recent interception of an asylum seeker boat.
Home Affairs Minister Peter Dutton says the raids are a matter for police. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

லிபரல் கூட்டணி அரசு ஆட்சிப்பொறுப்பேற்றுக்கொண்ட 2013 ஆம் ஆண்டு முதல் சமூக சேவைகள் மற்றும் கல்வி அமைச்சுக்களின் கீழ் பேணப்பட்டுவந்த அகதிகள் மீள்குடிமயர்வு விவகாரம்,  உள்துறை அமைச்சர் Peter Dutton வசம் சென்றுள்ளது.

இது தொடர்பாக அகதிகள் நல அமைப்புக்கள் வட்டாரங்களில் கவலை தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் அதிக எண்ணிக்கையிலான - பலதரப்பட்ட - அமைச்சுக்களின் கூட்டமைப்பாக உள்ள உள்துறை அமைச்சில்  மாற்றம் தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமைச்சர் Peter Dutton-இன் உள்துறை அமைச்சகத்திற்குள் ஏற்கனவே பல முக்கிய அமைச்சுக்கள் கடந்த அரசாங்கத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு பல அமைச்சுக்களை  Peter Dutton வசம் கொடுத்தமைக்கு அப்போதைய பிரதமர் Malcolm Turnbull விமர்சிக்கப்பட்டிருந்தார். தீவிர வலதுசாரிக்கொள்கையுடையவரின் கைகளில் பல்லின கலாச்சாரத்தினால் செழித்துள்ள ஒரு நாட்டின் முக்கிய அமைச்சுக்கள் எல்லாவற்றையும் ஒப்படைப்பது அடிப்படை அரசயலுக்கு முரண் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால், தற்போதைய அரசாங்கத்தில் Peter Dutton-க்கு முன்பிருந்த அமைச்சுக்களுடன் இன்னும் அதிகமான பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டிருப்பதுடன் அகதிகள் விவகாரம் பல்வேறு வகையில் விமர்சிக்கப்பட்டுவருகின்றநிலையில், அந்தத்துறை சார்ந்த migrant adult education and refugee resettlement services விவகாரங்களும் அவர்வசம் சென்றிருப்பது அகதிகள் நல செயற்பாட்டாளர்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆஸ்திரேலிய ஆட்சி அலகானது பரந்துபட்ட கொள்கை கொண்டதாக அமையவேண்டுமே தவிர, அரசியல் நோக்கங்களுடன் பயணப்படுவதாக இருக்கக்கூடாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now