நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகள் மருத்துவ தேவைகளுக்காக ஆஸ்திரேலியா வருவதை விரைவுபடுத்துவதற்கான சட்டமுன்வடிவுக்கு லேபர் கட்சி ஆதரவு வழங்கியுள்ள நிலையில் எதிர்கட்சியின் இச்செயற்பாடு நாட்டின் எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றென பிரதமர் Scott Morrison குற்றம்சாட்டியுள்ளார்.
அகதி ஒருவர் மருத்துவத் தேவைக்காக ஆஸ்திரேலியா அனுப்பிவைக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதில் மருத்துவருக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் இச் சட்டமுன்வடிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமுன்வடிவுக்கு கடந்த வாரம் செனட் அவையில் அனுமதி கிடைத்துள்ள பின்னணியில் எதிர்வரும் பெப்ரவரியில் நாடாளுமன்றம் கூடும்போது கீழவையிலும் இதை சட்டமாக்குவதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் எதிர்கட்சியின் ஆதரவு பெற்றுள்ள இச்சட்டமுன்வடிவு ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பிரதமர் Scott Morrison சாடியுள்ளார்.
Share
